நாம தேவர்

 பாண்டுரங்கா நீ இப்போது சாப்பிடாவிட்டால், உன் மீதே மோதி என் மண்டையை உடைத்துக் கொள்வேன்” என்றும்,  “உன்னை பக்தியோடு காணவரும் பக்தர்கள் மிதித்துவிட்டுச் செல்லும் வகையில் உன் ஆலயத்தின் படிக்கட்டுகளாக நான் ஆக வேண்டும் என்ற  பக்தன்  நாமதேவர் - விளக்கும் எளிய பக்தி கதை

துறவி நாமதேவர் (29 அக்டோபர், 1270 - 1350) (மராத்தி: संत नामदेव) (ஒரு வர்க்காரி வைணவத் துறவி. இவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் உள்ள நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு தையற்கலைஞர், இவருடைய தாயார் கோனாபாய்.

இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும் திருமணத்தின் மூலமும் குடும்ப பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் வாழ்க்கையில் தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின. இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்து பகவான் விட்ட்லரின் பெரும் பக்தனாக வாழ்ந்தவர். விட்டலர் மீது பல பதிகங்களைப் பாடியவர். இவரது பாடல்களில் சில சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது சீடர்களில் ஒருவர் ஜனாபாய் ஆவார்.

ஒருசமயம் நாமதேவின் தந்தை பாண்டுரங்கனுக்கு நைவேத்தியம் படைத்துவிட்டு, `இது பாண்டுரங்கனுக்கு’ என்று சொன்னாராம். அப்போது நாமதேவ் ஐந்து வயதுச் சிறுவன். தந்தை சொன்னதை அப்படியே நம்பிவிட்டான்.“பாண்டுரங்கா உனக்குத்தான் வந்து சாப்பிடு” என்றான். “பாண்டுரங்கன் வரவில்லை.

இரண்டு முறை, மூன்று முறை, பலமுறை கூப்பிட்டும் பாண்டுரங்கன் வரவில்லை. தான் கூப்பிட்டு பாண்டுரங்கன் வரவில்லையே என்ற கோபம் நாம்தேவுக்கு ஏற்படுகிறது. பாண்டுரங்கா நீ இப்போது சாப்பிடாவிட்டால் உன் மீதே மோதி என் மண்டையை உடைத்துக் கொள்வேன்” என்றான் சிறுவன் நாம்தேவ். அப்போதும் பாண்டுரங்கன் வரவில்லை. மனம் வெறுத்துப் போன நாம்தேவ், பாண்டுரங்கனின் சிலை மீது முட்டிக் கொள்ள முயன்றான். உடனே நாம்தேவின் முன்னால் தோன்றி அவனை அரவணைத்துக் காக்கிறான் பாண்டுரங்கன்.

நாமதேவர் ஊட்டிவிட பாண்டுரங்கன் சாப்பிடுகிறார். பாண்டுரங்கன் ஊட்டிவிட சிறுவன் நாமதேவர் சாப்பிடுகிறார். அன்றிலிருந்து இருவரும் இணைபிரியா நண்பர்களாகின்றனர், எண்ணற்ற பாடல்களை நாமதேவர் எழுதிப் பாடி பாண்டுரங்கனுக்கு தினம் தினம் பாமாலை சூட்டினார்.

நாம்தேவின் பக்தியை மெச்சி வைகுண்டத்துக்கே என்னோடு வந்துவிடு என்கிறான் பாண்டுரங்கன். ஆனால் அதை மறுத்த நாமதேவர் “உன்னை பக்தியோடு காணவரும் பக்தர்கள் மிதித்துவிட்டுச் செல்லும் வகையில் உன் ஆலயத்தின் படிக்கட்டுகளாக நான் ஆக வேண்டும் என்றார், அப்படியே நாம்தேவுக்கு அருள்பாலித்தாராம் பாண்டுரங்கன்.

ஜெய் ஜெய் இராம் க்ருஷ்ண ஹரி

ஸந்த ஜக்குபாய்

 பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய்.

இவர்கள் எப்போதும் பகவான் நாமத்தைச் சொல்லி, நல்லதையே நினைத்து, எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார்கள். இவர்களுக்கு சக்குபாய் என்ற பெண் குழந்தை இருந்தது.
தினமும் தெய்வ வழிபாட்டையும், பஜனையையும் கேட்டபடியே குழந்தை வளர்ந்தது. ஒரு நாள் தோழிகளுடன் சக்குபாய் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது பஜனைப் பாட்டுகளைப் பாடியபடியே முதியவர் ஒருவர் அந்த வீதி வழியாக வந்து கொண்டிருந்தார். சக்குபாய் கட்டிய மணல் வீடு, அவரின் கால் பட்டு அழிந்தது. கோபத்துடன் சக்குபாய், தாத்தா!! நான் எவ்வளவு ஆசையா இந்த வீட்டைக் கட்டினேன் தெரியுமா? நீங்கள் ஒரு நிமிடத்தில் நாசமாக்கி விட்டீர்களே… இது நியாயமா?’’ என்று கேட்டாள்.
‘‘பகவான் நாமத்தில் லயித்து இருந்ததால் தவறு நடந்து விட்டது!’’ என்று மன்னிப்பு கேட்டார் முதியவர். குழந்தை அல்லவா? தனது வீடு சிதைந்ததை அந்தப் பிஞ்சு மனதால் தாங்க முடியவில்லை.
தனது மணல் வீட் டுக்கு பதிலாக, அவர் கையில் மீட்டிக் கொண்டு வந்த தம்புராவைக் கேட்டாள். அவரும் தம்புராவைக் கொடுத்து அதை எப்படி மீட்டுவது என்று கற்றுக் கொடுத்தார்.
குழந்தையின் காதில் அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை ஓதி அதை தினமும் ஜபிக்குமாறும் கூறினார்.
‘‘அஷ்டாக்ஷரம் என்ற பெயருடைய பலர் இந்தக் கிராமத்தில் இருக்கிறார்களே? அவர்களில் யாருடைய பெயர் இது?’’ என்று கேட்டாள் சக்குபாய்.
அவளிடம் கஜேந்திரன் மற்றும் பிரகலாதன் கதைகளைக் கூறிய முதியவர், அஷ்டாக்ஷரத்தின் பெருமைகளையும் எடுத்துரைத்தார்.
அனைத்தையும் கேட்ட சக்குபாய், பெரியவரிடம் தான் விளையாட்டாக தம்புராவைக் கேட்டதாகச் சொல்லி, ‘‘அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள்.
சக்குபாயின் முதுகில் அன்புடன் தடவி, ‘‘தம்புராவை மீட்டி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பஜனைப் பாடல் பாடு!’’ என்று சொல்லி மறைந்தார் முதியவர்.
அதன் பிறகு குழந்தையின் மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. அவர் சொல்லித் தந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை எப்போதும் சொல்லியபடியே இருந்தாள். தோழிகளுடன் விளையாடச் செல்லவில்லை.
மனதில் எப்போதும் இறைவன் நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் அந்தப் பெரியவரைக் காண வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது.
பத்து வயதாகி விட்டதால், உடனே இவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வரன் தேடி னர். எப்போதும் மௌனமாக இருப்பதால் இவளை ‘பைத்தி யம்!’ என்று ஊரார் பேசத் தொடங்கினர்.
இந்த நிலையில் சிந்து தேசத்திலிருந்து மித்ருராவ் என்ற இளைஞன் வியாபார விஷயமாக அங்கு வந்தான். அவனது அறிவும் அழகும் சக்குபாயின் பெற்றோருக்குப் பிடித்ததால், அவனைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
அதுவரை திருமணமே வேண்டாம் என்று சொன்ன சக்குபாயும் திருமணத்துக்குச் சம்மதித்தாள்.
திருமணம் சிறப்பாக நடந்தது. சக்குபாய் சிந்து தேசத்துக்குச் சென்றாள்.
கணவர் வீட்டில் மாமியாரும் நாத்தனாரும் நன் றாக வேலை வாங்கினார்கள். சக்குபாயும் எல்லா வேலைகளையும் பொறுமையாகச் செய்தாள். மனம் மட்டும் எப்போதும் பகவான் நாமத்தை சொல்லியபடியே இருந்தது.
தன் மனைவி எதிலும் பற்று இல்லாமல் இருப்பது மித்ருராவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
சக்குபாயோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், பஜனை செய்வதுமாக இருந்தாள். இவளை இங்கும் ‘பைத்தியம்’ என்றனர் பலர்.
அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மந்திரவாதியைக் கூப்பிட்டு, பேய் ஓட்டச் சொன்னார்கள். அறையில் வைத்து பூட்டி னார்கள். அங்கும் அவள் தியானம் செய்தாள்.
பஜனைப் பாடல்களைக் கண்ணீருடன் மனம் உருகிப் பாடினாள்.
அவள் குழந்தையாக மணல் வீடு கட்டியபோது முதியவர் வேடத்தில் வந்த பகவான், மீண்டும் அதே வேடத்தில் சக்குபாய் வீட்டுக்கு வந்தார்.
தான் பேய் ஓட்டுவதில் வல்லவன் என்று முதியவர் கூற சக்குபாயின் மாமியார் அவரை சக்குபாய் அறைக்குச் சென்று பேய் ஓட்டும் படி கூறினாள். அவரைப் பார்த்ததும், சக்குபாய்க்கு அவரை முதலில் சந்தித்தது நினைவுக்கு வந்தது.
அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். இதைப் பார்த்த அவள் கணவரும் மாமியாரும் இவரால் சக்குபாய்க்குப் பைத்தியம் தெளியும் என்று சமாதானம் அடைந்தனர்.
முதியவர் சக்குபாயிடம், ‘‘இல் வாழ்க்கையில் இருந்து கணவருக்கும் மற்றவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்து, அந்த வாழ்க்கையை அனுபவித்த பிறகே அதில் உள்ள பற்றுவிடும்.
ஆகவே, இனி நீ உன் கணவருக்குத் தேவையானதை இன்முகத்துடன் பூர்த்தி செய்’’ என்றார். அப்படியே இருப்பதாக வாக்குக் கொடுத்தாள்.
கணவருடன் இனிமையாகப் பேசி, அவரை மகிழ்வித்தாள் சக்குபாய். இவர்களின் இல்லறத்தைப் பார்த்து ஊரே வியந்தது. சக்குபாய் சந்தோஷமாக இருந்தாலும், அந்த முதியவரை இனி ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிக்கடி தோன்றி அவளை வாட்டியது. இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு நீர் எடுக்கச் சென்றபோது கிணற்றில் குதித்தாள். இதைப் பார்த்து பகவான் சும்மா இருப்பாரா? பக்தரின் வடிவில் வந்து காப்பாற்றி, நல்ல வார்த்தைகள் பல கூறி அவளை சமாதானப்படுத்தினார்.
அதனால் தெளிவடைந்த சக்குபாய் அவரிடம் சகஜமாக மனம் விட்டுச் சிரித்துப் பேசினாள். அங்கு தண்ணீர் பிடிக்க வந்த சில பெண்கள், இந்தக் காட்சியைக் கண்டு மித்ருராவிடம் சென்று சக்கு பாய்க்கும் வேறு ஆடவனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குளக்கரையில் அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறினர்.
கோபத்துடன் அங்கு வந்த மித்ருராவ், அவளைத் திட்டியதுடன், அவளிடம் பேசிய அந்த மாய பக்தனைப் பார்த்தார். ஆனால், மித்ருராவின் கண்களுக்கு, முன்பு வீட்டுக்கு வந்த முதியவர் போல காட்சி தந்தார் பகவான். சக்குபாய் கால் தவறி கிணற்றில் விழுந்ததாகவும், தான் காப் பாற்றியதாகவும் கூறினார்.
அவரிடம் மன்னிப்புக் கேட்டு, மனைவியுடன் வீடு திரும்பினார் மித்ருராவ். பழைய படி இல்லற வாழ்க்கை இனிமை யாகச் சென்றது.
ஒரு முறை சக்குபாய் தண்ணீர் எடுக்க குளக்கரைக்குச் சென்றபோது, அந்த வழியாக பஜனை செய்தபடி ஒரு குழு பண்டரிபுரம் சென்று கொண்டிருந்தது.
கபீர்தாஸ், ராமதாஸ், நாமதேவர் என்று பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களை வலம் வந்து தன்னையும் அவர்களுடன் பண்டரிபுரம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள் சக்குபாய்.
அதற்கு அவர்கள், ‘‘கணவரிடமோ, மாமியாரிடமோ உத்தரவு வாங்கி வந்தால்தான் அழைத்துச் செல்வோம்!’’ என்றனர்.
இல்லத்துக்கு வந்த சக்குபாய் தன் கண வரிடம் விவரத்தைச் சொல்லி, அனுமதி கேட்டாள்.
கணவரோ தற்போது அங்கு செல்ல வசதி இல்லாததால் அடுத்த வருடம் தானே அழைத்துச் செல்வதாகக் கூறி னார். சக்குபாய் பிடிவாதம் பிடிக்கவே அவளை ஓர் அறையில் வைத்துப் பூட்டினார். அறையில் இருந்தபடி பண்டரிநாதனை மனம் உருக அழைத்துக் கதறி அழுதாள்.
‘எத்தனையோ பேர் பகவானின் திருவிழாவைக் காணும்போது, தனக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே!’ என்று சங்கடப்பட்டாள்.
தன் பக்தை துன்பப்படுவதை பக வான் பொறுப்பாரா? உடனே அவர் ஒரு பெண் உரு வில் அந்த அறைக்கு வந்தார். பூட்டை உடைத்து அவளுடைய கயிற்றை அவிழ்த்துவிட்டு, தன்னைத் தூணில் கட்டும்படி கூறினார். ‘‘யாருக்கும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக பண்டரிபுரத்துக்குப் போ!’’ என்றார்.
வந்திருப்பது பகவான் என்று தெரியாமல் அவ ரைத் தூணில் கட்டிப் போட்டாள் சக்குபாய். பிறகு வீட்டின் பின்பக்கமாக வெளியேறி, கபீர்தாஸ் பஜனை கோஷ்டியிடம் சென்று, தானும் பண்டரிபுரம் வருவதாகக் கூறினாள்.
தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்த கபீர்தாஸ் சந்தோஷத்துடன் அவளை தன் பஜனை கோஷ்டியில் சேர்த்துக் கொண்டார்.
சக்குபாய் தனது இனிய குரலால் பாடல்களைப் பாடி, எல்லோரையும் மகிழ்வித்தாள். பக்தர்களின், ‘பாண்டுரங்க விட்டல! ஜே! ஜே! விட்டல பண்டரி நாதா’ என்ற குரல் எல்லா இடத்திலும் ஒலித்தது.
சக்குபாய்க்காக இறைவன் அறைக்குள் இருப்பதை அறியாத அவள் கணவர், பாகவத கோஷ்டி கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு, அறையைத் திறந்தார்.
அங்கு சக்குபாயின் உருவில் இருந்த பகவான், ஒன்றுமே நடக்காதது போல் அவர் சொல்லுக்குப் பணிந்து நடந்தார்.
வழக்கம்போல அந்த வீட்டில் எல்லோரும் அவளை வேலை வாங்கினார்கள். அவளும் சந்தோஷத்துடன் வேலை செய்வதைப் பார்த்து திருப்தி அடைந்தனர்.
பண்டரிபுரம் சென்ற சக்குபாயோ பகவானின் சந்நிதியை விட்டு வர மனம் இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து, ஒவ்வொரு நாளையும் மிகவும் சந்தோஷமாகக் கழித்தாள். ஒரு நாள் பகவானுக்குப் பூமாலை சூட, பூக்களைப் பறிக்கும்போது, பாம்பு கடித்து பாண்டுரங்கன் சந்நிதியில் மயங்கி வீழ்ந்தாள். அவள் இறந்து விட்டதாகக் கருதிய மற்றவர்கள், அவளை அருகில் உள்ள சத்திரத்தில் போட்டு விட்டு, அவளின் கணவருக்குச் செய்தி அனுப்பினர்.
இதைக் கேட்ட மித்ருராவ் கோபத்துடன் அவர்களை நோக்கி, ‘‘எப்போதும் என் மனைவியைக் குறை கூறுவதே உங்கள் பிழைப்பாகி விட்டது. அவள் இங்கேதான் இருக்கிறாள். அவளைக் குறை கூறி இனி யாரும் இங்கே வர வேண்டாம்!’’ என்று வந்தவர்களைத் துரத்தினார்.
பாம்பு கடித்த நிலையில் மயங்கிக் கிடந்த சக்குபாயை பகவான் வைத்தியராக வந்து காப்பாற்றினார். பிறகு அவளுக்கு நல்ல வார்த்தைகள் கூறி, அவளை பண்டரிபுரத்திலிருந்து ஊர் வரைக்கும் அழைத்து வந்து மறைந்தார்.
ஊருக்குள் வந்த சக்குபாய், தான் கட்டிப்போட்ட பெண் ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுப்பதைப் பார்த் தாள். ‘உடனே வருவதாகச் சொல்லி பல நாட்கள் தங்கி விட்டோமே!’ என்று வருந்தி, அவளிடம் மன்னிப்புக் கேட்டாள்.
உடனே அந்தப் பெண், சக்குபாய்க்கு பகவானாகக் காட்சி கொடுத்தார். இன்னும் சில காலம் இல்லறத்தில் இருக்கும்படி கூறி மறைந்தார். வீட்டுக்கு வந்த சக்குபாய் தனக்காக, இங்கு இருந்தது பகவானே என்பதை எல்லோரிடமும் சொன்னாள்.
கணவரும் தன் தவறை உணர்ந்தார். செல்வம் நிறைய இருந்தும் தானம் என்பதை மறந்து வாழ்ந்ததற்காக வருந்தினார். சக்குபாயுடன் சேர்ந்து நிறைய தான தர்மங்கள் செய்தார்.
பல க்ஷத்திரங்களுக்கு தம்பதி யாகச் சென்று வணங்கினர். பிறகு பண்டரிபுரத்துக்கே வந்து இறைவன் புகழ் பாடி, தியானத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்நாளை இறைவனுக்கு அர்ப்பணித்து இறுதியில் இறைவனடி சேர்ந்தனர்.
ஜெய் ஜெய் விட்டல் ஜெய ஹரி விட்டல்
22
5 Comments

நான் யார்

 

நான் யார் என்ற ஆத்ம விசாரனையை விளக்குவது நிர்வாண சதகமா? ஷடகமா?

ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவே காண்கிறோம். அவர் ஓர் அற்புதமான கவி என்பதை அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது அறிந்துகொள்ளலாம். 

முக்கியமாக, ‘நிர்வாண ஷடகம்’. (சதகம் என்பது 100 பாடல்கள்)... நிர்வாண ஷடகம் என்பது 6 பாடல்கள். ஆனால், அந்த 6 பாடல்களுக்குள் இந்தப் பிரபஞ்சத்தையே அடக்கிவிட்டார் ஆதி சங்கரர் என்ற மஹாகவி. இது ஆத்மஷடகம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. 

தனது குருநாதர் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை நர்மதை நதிக்கரையில் முதலில் தரிசனம் செய்கிறார் ஸ்ரீ சங்கரர். ” நீ யார்?” என்று குருநாதர் கேட்க, எட்டு வயதான ஸ்ரீ சங்கரன் மிகுந்த விநயமுடன் அதற்குக் கூறிய பதிலே “நிர்வாண ஷடகம்” என்ற ஸ்லோகம்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் தனது எட்டாவது வயதில் என்போன்ற அக்ஞானிகளுக்கும் அதுபோன்ற அத்வைத நிலை எட்ட வேண்டும் என்ற கருணையினால் தனது குருவிடம் பணிவோடு “தான் யார்?” என்று உரைத்த உயர்ந்த விளக்கம்.

1. மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,

ந ச வ்யோம பூமிர், ந தேஜோ ந வாயு:

சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!

மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு

கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;

வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;

சிதானந்த ரூபம் சிவோஹம்! சிவோஹம்!

2. ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு:

ந வா சப்த தாதுர், ந வா பஞ்சகோசா:

ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு:

சிதானந்த ரூப: சிவோஹம்! சிவோஹம்!

உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;

எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;

கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

3. ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ,

மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:

ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:

சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!

வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;

சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;

அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

4. ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!

ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞா:

அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,

சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;

மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;

உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

5. ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:

பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா

ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்ய:

சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!

மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;

தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;

உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

6. அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,

விபுத் வாச்ச, சர்வத்ர, சர்வேந்த்ரி யாணாம்

நசா சங்கடம் நைவ, முக்திர் ந மேயா

சிதானந்த ரூப: சிவோஹம்! சிவோஹம்!

மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;

எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;

தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

நிர்வாண ஷடகம் பாடலுக்குப் பக்கம் பக்கமாக விளக்கம் எழுதிக்கொண்டு போகலாம். 

பஞ்ச வாயு

ப்ராணன் – உள்ளே இழுக்கும் காற்று

அபானன் – அழுக்குகளை வெளியேற்றும் காற்று;

சமானன் – செரிக்கும் காற்று;

உதானன் – உறுப்புகளை இயக்கும் காற்று;

வ்யானன் – செய்கைகளை இயக்கும் காற்று.

சப்த தாதுக்கள்

ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து.

பஞ்சகோசம் (போர்வைகள்)

அன்னமய கோசம் – உணவால் ஆனது

ப்ராணமய கோசம் – காற்றால் ஆனது;

மனோமய கோசம் – மனதால் ஆனது

விஞ்ஞானமய கோசம் – அனுபவத்தால் ஆனது

ஆனந்தமய கோசம் – இன்பத்தால் ஆனது

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்.

புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன்.

இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.

ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது. சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது.

ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம்.

ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். (வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்.

கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.) தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

-######

ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2 ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

குலதெய்வங்கள் என்றால் என்ன

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?  ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

குலதெய்வகோவிலுக்கு உதவுங்கள்....